Home உலகம் வரலாற்றில் முதன்முறையாகச் சவூதி அரேபியா-ரஷ்யா இடையே அணுசக்தி ஒப்பந்தம்!  

வரலாற்றில் முதன்முறையாகச் சவூதி அரேபியா-ரஷ்யா இடையே அணுசக்தி ஒப்பந்தம்!  

592
0
SHARE
Ad

savதுபை, ஜூன் 23- வரலாற்றில் முதன்முறையாகச் சவூதி அரேபியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அணுசக்தித் துறையில் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சென்ற வாரம் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் நடந்த சர்வதேசப் பொருளாதார வாரியத்தின் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

சவூதி அரேபியாவில் இதுவரை எந்த அணு உலைகளும் உருவாக்கப்படவில்லை. ஆனால், அணுசக்தியை உற்பத்தி செய்வதில் சமீப காலமாக அதிக ஆர்வம் காட்டி வருகிறது சவூதி அரேபியா.

#TamilSchoolmychoice

இந்த ஒப்பந்தத்தின்படி இருநாடுகளும் அணுசக்தித் துறையில் பல்வேறு பிரிவுகளில் இணைந்து செயல்பட உள்ளன. குறிப்பாக, அணு உலைகளை உருவாக்குவது, அணுசக்தி எரிபொருளை மறுசுழற்சி செய்வது உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்பட உள்ளன.

மேலும், கதிரியக்க ஆபத்துகள் நிறைந்த அணுக்கழிவுகளின் பிரச்சனைகளைச் சந்திப்பதிலும் இருநாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன..

.