Home உலகம் 1 நிமிடத்தில் 44 புல்அப்ஸ் – சிங்கப்பூர் இளைஞர் கின்னஸ் சாதனை

1 நிமிடத்தில் 44 புல்அப்ஸ் – சிங்கப்பூர் இளைஞர் கின்னஸ் சாதனை

649
0
SHARE
Ad

Most Pull ups in one minute Guinness World Records_tcm25-386048சிங்கப்பூர், ஜூன் 23 – ஒரு நிமிடத்தில் 44 புல்அப்ஸ் அடித்து 15 வயது சிங்கப்பூர் இளைஞர் உலக சாதனை படைத்துள்ளார்.

இயோ கிம் இயாங் (வயது 15) என்ற அந்தச் சிங்கப்பூர் இளைஞர் ஒரு நிமிடத்தில் 44 புல்அப்ஸ் அடித்து, ஏற்கனவே அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பவுர்டன் என்பவரின் 1 நிமிடத்தில் 42 புல்அப்ஸ் சாதனையை முறியடித்துள்ளார்.

இயோ கிம்மின் இந்தச் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றதோடு, தற்போது அதன் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தனது சாதனை குறித்து இயோ கிம் கூறுகையில், “இந்த உலகத்தில் எதுவுமே முடியாது என்று இல்லை என்பதை எப்போதும் நம்புகின்றேன். ஒரே கனவுடன் செயல்பட்டால் எதுவும் முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

படங்கள்: கின்னஸ் ரெக்கார்ட்ஸ் இணையத்தளம்