Home உலகம் பிரான்ஸ், குவைத், துனிசியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதலிக்கு 161 பேர் பலி!

பிரான்ஸ், குவைத், துனிசியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதலிக்கு 161 பேர் பலி!

510
0
SHARE
Ad

1435355618-0108குவைத், ஜூன் 27 – குவைத், சிரியா, பிரான்ஸ், துனிசியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில், 161 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பலர், கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

ஈராக் மற்றும் சிரியாவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளனர். குறிப்பாக, ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராக அவர்கள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று, குவைத்தில் உள்ள ஷியா மசூதியில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றது. அப்போது, தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகள், திடீர் தாக்குதலை நடத்தினர்.

இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

#TamilSchoolmychoice

1435355012-6327சிரியாவில், குர்திஷ் நகரமான கொபேனில், குர்திஷ் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடைய கடும் சண்டை நடந்து வருகிறது. இதில், சமீபகாலமாகத் தீவரவாதிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், கொபேன் நகருக்குள் தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தினர். ராக்கெட்டுகள் மூலமாகவும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் என 120 பேர் உயிரிழந்தனர்.

இதேபோன்று, துனிசியாவின் துனிஷ் நகரில் உள்ள, கடற்கரை ஓட்டலுக்குள், தீவரவாதி ஒருவன் நேற்று புகுந்தான். கையில், நவீன துப்பாக்கியை வைத்திருந்த அவன், அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாகச் சுட்டான்.

blogger-image-929007853இதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தாக்குதலை நடத்திய தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாகவும், துனிசியா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரான்சில் செயின் குயின்டின் பலேவர் நகரில், காஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இங்கு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 2 பேர், தங்களது காரில் வெடி பொருட்களை நிரப்பி, தொழிற்சாலைக்குள் சென்று மோதினர். கார் வெடித்துச் சிதறியதில், அதனுள் இருந்த இருவரும், தொழிலாளி ஒருவரும் உயிரிழந்தனர்.

மேலும் ஒரு தொழிலாளியின் கழுத்தை துண்டித்து, தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். அரபு எழுத்துக்கள் எழுதப்பட்ட நிலையில், கொல்லப்பட்டவரது தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பிரான்சில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.