Home அவசியம் படிக்க வேண்டியவை “சாதி வெறிக்குக் களம் அமைத்துக் கொடுத்து விட்டேன்” – பேஸ்புக்கிலிருந்து வெளியேறினார் சிவக்குமார்!

“சாதி வெறிக்குக் களம் அமைத்துக் கொடுத்து விட்டேன்” – பேஸ்புக்கிலிருந்து வெளியேறினார் சிவக்குமார்!

579
0
SHARE
Ad

Sivakumarசென்னை, ஜூன் 27 – பேஸ்புக் பக்கத்தில் நடிகர் சிவக்குமார், தீரன் சின்னமலை பற்றிச் சமீபத்தில் எழுதிய கருத்துக்களால் அவரைப் பின்பற்றும் பயனர்களுக்குள் மிகப் பெரிய சாதீயச் சர்ச்சை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பேஸ்புக்கில் இருந்து விலகுவதாக அவர் நேற்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் சிவக்குமார் தனது பதிவில் கூறியிருப்பதாவது:-

“என்றுமே என்னை மனிதப் புனிதன் என்றோ –

#TamilSchoolmychoice

வழிகாட்டும் தலைவன் என்றோ –

வாரி வழங்கும் வள்ளல் என்றோ –

பேரறிவாளன் என்றோ –

நடிப்புக் கலை – ஓவியக்கலையில் கரை கண்டவன் என்றோ –

பெரிய சாதனையாளன் என்றோ நினைத்துக் கொண்டு நான் முகநூலில் பதிவிடவில்லை.

70 வயது தாண்டி, முடிந்தவரை நேர்மையாக, இந்த மண்ணில் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை, தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளவே எழுதி வந்தேன். இது சிலருக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் வன்மத்தை – சாதி வெறியை – வளர்த்துக்கொள்ளக் காரணமாக இருக்கிறது என்று அறிந்து வருந்துகிறேன்.”

“தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கவும், குடும்பத்தினரைக் குறை கூறவும் , நானே களம் அமைத்துக் கொடுத்ததாக உணர்கிறேன். என் உலகம் சிறியது, அதில் என் வாழ்க்கை மிகவும் எளிமையானது. இது உங்கள் உலகம்! உங்கள் சுதந்திரம்!நீங்கள் நினைத்தபடி வாழுங்கள். எல்லோரும் இன்புற்றிருக்கவே இத்துடன் என் முகநூல் பதிவுகளை நிறைவு செய்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.