Home Featured கலையுலகம் “சிவக்குமார் ஒரு மனுஷனா?” – சரத்குமார் ஆவேசம்!

“சிவக்குமார் ஒரு மனுஷனா?” – சரத்குமார் ஆவேசம்!

666
0
SHARE
Ad

saarathசென்னை – தமிழ் சினிமாவில் பெரிய அளவில் மதிக்கப்படும் மூத்த நடிகர்களுள் சிவக்குமாரும் ஒருவர். நடிகர் சங்க விவகாரத்தில், அவரது பெயரும் சிக்கி சின்னாபின்னமாகி வருவது வேதனை அளிக்கிறது.

நேற்று முன்தினம் சரத்குமார் தலைமையில் நடிகர்-நடிகைகள் கூடி விஷாலின் பாண்டவ அணியினரை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினர். நடிகர் ராதாரவி, கமல்ஹாசன், விஷால், எஸ்வி சேகர் என ஒருவரையும் பாரபட்சம் பாராமல் திட்டித் தீர்த்துவிட்டார். இந்நிலையில், இறுதியாக பேச வந்த சரத்குமார், நடிகர் சிவக்குமாரை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சிவக்குமாரை சாடியதற்கான காரணத்தையும் சரத்குமாரே கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

சரத்குமார் பேசியதாவது:-

“ஒருநாள் ஈனத்தனமான கேள்வி ஒன்றை என் மனைவியை பார்த்து சிவக்குமார் கேட்டுள்ளார். என் மனைவியின் சொத்துக்களை வைத்து நான் படங்கள் எடுத்து, அழித்துவிட்டதாக  அவர் கேட்டிருக்கிறார். என் மனைவியின் சொத்துக்களை விற்கும் அளவிற்கு கேவலமான மனிதனா நான்? அந்த அளவிற்கு உடல் வலிமை இல்லாதவானா நான். சிவக்குமாரின் கேள்வி மிகுந்த வேதனை அளிக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “தைரியம் இருந்தால் ஆம்பளைக்கு ஆம்பளையாக என்னிடம் வந்து கேள்” என்று ஒருமையில் குறிப்பிட்டும் கடுமையாக சாடி உள்ளார்.

நக்கீரன் வெளியிட்டுள்ள அந்த காணொளி:-