Home இந்தியா சென்னையில் தொடரும் அனல் காற்று: பொது மக்கள் அவதி!

சென்னையில் தொடரும் அனல் காற்று: பொது மக்கள் அவதி!

630
0
SHARE
Ad

சென்னை, ஜூலை 6- சென்னையில் தொடரும் அனல் காற்றால் பொது மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

அக்னி நட்சத்திரம் முடிந்து ஒரு மாதத்துக்கும் மேலாகியும், கோடை வெயில் என்னவோ முடிந்தபாடில்லை.. தமிழகம் முழுவதும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகின்றது.  பகல் ஒரு மணியளவில் 102 டிகிரி பாரன்ஹீட்டையும் தாண்டி வெயில் சுட்டெரிக்கின்றது.

#TamilSchoolmychoice

Ind

சென்னை, கடலூர், மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகபட்சமான வெயில் பதிவாகியிருந்தது.

இந்நிலையில்,மேலும் 2 அல்லது 3 நாட்களுக்கு இந்தக் கடுமையான வெயில் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

524875407_fd785bcfbc_zகோடை காலம் முடிந்த பின்னரும் தமிழ்நாட்டில் வெயில் கொளுத்துவதற்கான காரணம் குறித்துச் சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:

“தமிழ்நாட்டில் பகல்நேரத்தில் வானம் மிகவும் தெளிவாகக் காணப்படுகிறது. இதனால் வெயிலின் கடுமை அதிகமாக இருக்கிறது. மேலும் கடல் காற்று தாமதமாகத்தான் நிலப்பகுதியை நோக்கி வீசுகிறது.

இதன் காரணமாகவும் வெயில் அதிகமாகக் கொளுத்தி வருகிறது. இன்னும் சில நாட்களில் தமிழ்நாட்டில் மழையை எதிர்பார்க்கலாம். அப்போது மீண்டும் கோடை காலம் திரும்பியது போல வெயில் அடிக்காது”என்றார்.