Home கலை உலகம் முகநூலில் மதுக்கோப்பையுடன் சரத்குமார்: பொதுமக்கள் அதிருப்தி!

முகநூலில் மதுக்கோப்பையுடன் சரத்குமார்: பொதுமக்கள் அதிருப்தி!

602
0
SHARE
Ad

sarathசென்னை, ஜூலை 6- முகநூல் நட்பு ஊடகத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர் நடிகர் சரத்குமார்.

நாட்டு நடப்புகள் குறித்து உடனுக்குடன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிடுவது அவரது வழக்கம்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் பதிவேற்றியுள்ள புகைப்படம், அவரது இரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

#TamilSchoolmychoice

ஒரு மதுபானக் கூடத்தில்  அவர் மதுக் கோப்பையுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றினை அவர் பதிவேற்றியுள்ளார்.

சரத்குமார் ஒரு பொறுப்பு மிக்க அரசியல் தலைவர்; சட்டப்பேரவை உறுப்பினரும் கூட.

இளைஞர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அவர், இப்படிப் பொறுப்பில்லாமல், சமூக அக்கறையில்லாமல், மூன்றாம் தர மனிதரைப் போல,மதுக் கோப்பையுடன் இருக்கும் இந்தப் புகைப்படத்தைப் பதிவேற்றலாமா? இது தவறான முன்னுதாரணமல்லவா? எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏற்கனவே, நடிகர் சங்கத் தலைவர் என்கிற பொறுப்பிலேயே சர்ச்சைக்குள்ளாகியுள்ள சரத்குமார், இப்படி வீணான விளம்பரத்திற்காக மேலும் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது தேவைதானா?