Home உலகம் அமெரிக்காவின் இரகசியத் தகவல்களைச் சீனா திருடுகிறது: ஹிலாரி கிளிண்டன்!

அமெரிக்காவின் இரகசியத் தகவல்களைச் சீனா திருடுகிறது: ஹிலாரி கிளிண்டன்!

571
0
SHARE
Ad

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????வாஷிங்டன்,ஜூலை 6- அமெரிக்க அரசின் இரகசியத் தகவல்களைச் சீனா திருடுவதாக, அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க அரசின் இரகசியத் தகவல்கள் மற்றும் இராணுவம் தொடர்பான தகவல்களைச் சீனா திருடியும், செயலிழக்கச் செய்தும் வருவதாக அமெரிக்க அதிகாரிகள் அடிக்கடிப் புகார்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் இந்தப் புகார்களைச் சீன அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

#TamilSchoolmychoice

அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடவிருக்கிறார்.

இதற்கான வேட்பாளர் போட்டியில் குதித்துள்ள அவர், நாடு முழுவதும் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் அமெரிக்கச் சுதந்திர தினத்தையொட்டி வடக்கு நியூ ஹாம்ப்ஷையரின் கிளன் பகுதியில் ஜனநாயகக் கட்சி ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டன் பேசும் போது கூறியதாவது:

“சீன இராணுவம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. சீனா நிறுவி வரும் ராணுவ நிலைகள் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன.

அது மட்டுமின்றி, சீன அரசு அதிகாரிகள் அமெரிக்காவின் பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து வர்த்தக இரகசியங்கள், அதிக அளவிலான அரசுத் தகவல்கள் போன்றவற்றைத் திருடி வருகின்றனர்.

அமெரிக்காவில் இருந்து பெற முடியாத தகவல்களை அவர்கள் செயலிழக்கவும் முயற்சி செய்து வருகின்றனர். எனவே அமெரிக்கா முழு விழிப்புடன் இருக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

இதனால் சீன அரசு, ஹிலார் கிளிண்டன் மீது கடுங்கோபத்தில் இருக்கிறது. இதற்கான மறுப்பு ஏதும் சீன அரசுத் தரப்பிலிருந்து இதுவரை வெளியிடப்படவில்லை.