சென்னை, ஜூலை 6- முஸ்லிம்களுக்கு இம்மாதம் புனிதமான மாதமாகும். இந்த மாதத்தில் புனிதமான ரம்ஜான் நோன்பை மேற்கொள்வது அவர்களின் வழக்கமாகும். இப்புனிதமான ரம்ஜான் நோன்பை அவர்கள் மிகவும் தீவிரமாகக் கடைப்பிடிப்பார்கள்.
அரசியல் தலைவர்கள் இம்மாதத்தில் முஸ்லிம் மதத்தினருடன் இப்தார் விருந்தில் கலந்து கொள்வது வருடா வருடம் வாடிக்கையாக நடப்பதுண்டு. அது அரசியல் லாபத்திற்காக என்பது பலருக்கும் தெரிந்த விசயம்.
ஆனால், ஒரு நடிகர் இப்தார் விருந்தில் கலந்து கொள்வதென்பது எந்தவொரு லாபம் கருதியும் அல்ல. அதிலும், அவரே இப்தார் விருந்து கொடுக்கிறார் என்றால் அதில் எந்த உள் நோக்கமுக் இல்லை; உயர்ந்த உள்ளம் மட்டுமே இருக்கிறது.
அந்த உயர்ந்த உள்ளத்திற்குச் சொந்தக்காரர் நடிகர் விஜய்!
அவர், ரம்ஜானை முன்னிட்டு 100 இஸ்லாம் சகோதரர்களை அழைத்து அவர்களுக்கு இப்தார் விருந்து கொடுத்திருக்கிறார்.
மேலும், முஸ்லிம் ஆடை அணிந்து இப்தார் நோன்பில் கலந்துகொண்டு அவர்களுக்கு உணவையும் பரிமாறியுள்ளார்.
இதனை விஜயின் இரசிகர்கள் புகைப்படம் எடுத்துச் சமூக வலைதளத்தில் போட்டுள்ளனர்.
இந்தப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.