Home இந்தியா ஏரோ பிரிட்ஜ் மீது விமானம் மோதல்: சென்னையில் பரபரப்பு!

ஏரோ பிரிட்ஜ் மீது விமானம் மோதல்: சென்னையில் பரபரப்பு!

473
0
SHARE
Ad

aeroசென்னை, ஜூலை 10- ஏடிஆர் உள்ளிட்ட சிறிய ரக விமானங்களில் பயணிகள் ஏறப் பயன்படும் படிக்கட்டுகளுடன் கூடிய ‘ஏரோ பிரிட்ஜ்’ மீது தனியார் விமானம் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

நேற்று காலை சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் ‘கோ ஏர்’ என்ற தனியார் விமானத்தில் பயணம் செய்ய 140 பயணிகள் காத்திருந்தனர். குறிப்பிட்ட அந்த விமானம் மும்பையில் இருந்து 140 பயணிகளுடன் சென்னை வந்தடைந்தது. இதே விமானம் பின்னர் அந்தமான் செல்வதாக இருந்தது.

குறித்த நேரத்தில் அந்த விமானம் மும்பையில் இருந்து வந்து சென்னை வந்தடைந்தது. இதையடுத்து அந்த விமானத்தில் இருந்த பயணிகள் இறங்க, ‘ஏரோ பிரிட்ஜ்’ வாகனம் தயார் நிலையில் காத்திருந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் விமான நிறுத்துமிடம் நோக்கி வந்த தனியார் விமானம், எதிர்பாராத விதமாக ‘ஏரோ பிரிட்ஜ்’ வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விமான ஊழியர்கள் பதற்றமடைந்தனர்.

எனினும் விமானத்துக்குப் பெரியளவில் சேதம் ஏற்படவில்லை. இதையடுத்து அதிலிருந்த 110 பயணிகளும் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டனர். எனினும் இந்த விபத்துக் காரணமாக அந்த விமானம் அந்தமான் செல்லவிருந்தது ரத்து செய்யப்பட்டது.