Home கலை உலகம் ‘பாகுபலி’க்குப் பலத்த வரவேற்பு அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு மில்லியன் வசூல்!

‘பாகுபலி’க்குப் பலத்த வரவேற்பு அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு மில்லியன் வசூல்!

619
0
SHARE
Ad

1430563488-7778நியூயார்க், ஜூலை 10- பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாகுபலி’ திரைப்படத்திற்கு அமெரிக்க ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்புக் கிடைத்துள்ளது.

அங்கு இப்படம் திரையிடப்பட்ட முதல் நாளே ஒரு மில்லியன் டாலர் வசூலித்துச் சாதனை படைத்துள்ளது.

நேற்றைய தினம் இப்படத்திற்கான சிறப்புக் காட்சிகள் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் திரையிடப்பட்டன. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில், 250 கோடி ரூபாய் செலவில் உருவான இப்படத்தைக் காண அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆர்வத்துடன் திரண்டனர்.

#TamilSchoolmychoice

மொத்தம் 300 அரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. இதில் 118 திரையரங்குகளில் மட்டுமே ‘பாகுபலி’யின் முதல் நாள் வசூல் 1,010,550 என இப்படத்தின் விநியோக உரிமையைப் பெற்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாகச் சியாட்டல் நகரில் இந்தப் படத்தைப் பார்த்த அனைத்து ரசிகர்களும் திரையரங்கில் எழுந்து நின்று பலத்த கரவொலிகளுடன் தங்களது மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்தனர்.

படம் வெளியான அனைத்துத் திரையரங்குகளிலும் எவ்வளவு வசூல் என்கிற நிலவரம் விரைவில் தெரியவரும்.