Home இந்தியா குழந்தையைக் காப்பாற்றாதது ஹேமமாலினி தவறு:மத்திய அமைச்சர் கருத்து!

குழந்தையைக் காப்பாற்றாதது ஹேமமாலினி தவறு:மத்திய அமைச்சர் கருத்து!

755
0
SHARE
Ad

Tamil_Daily_News_2738153935புதுடெல்லி, ஜூலை 10- விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய குழந்தையைக் காப்பாற்ற நடிகை ஹேமமாலினி தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்; அவ்வாறு செய்யாமல் ஹேமமாலினி தவறு செய்துவிட்டார் என மத்திய அமைச்சர் சுப்ரியோ பாபுல் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் நடிகையும், பாரதிய ஜனதா எம்.பி.யுமான ஹேமமாலினி சென்ற கார் ராஜஸ்தானில்புள்ள தவ்சா பகுதியில் மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். ஹேமமாலி காயமடைந்தார்.

விபத்து நிகழ்ந்த பின்னர் அஙகு வந்த காவல்துறையினரும், மீட்புப் படையினரும் படுகாயமடைந்த குழந்தையைக் கண்டு கொள்ளாமல், ஹேமமாலினியை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இந்த விபத்து குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ ஹேமமாலினி செய்தது தவறுதான் என்று கூறியுள்ளார்.

“விபத்து நிகழ்ந்ததற்கு ஹேமமாலினி உட்பட அனைவருமே பொறுப்பேற்க வேண்டும். எனினும் சமூகப் பொறுப்புகளைச் சுமந்து கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதியான ஹேமமாலினி காயமடைந்த அந்தக் குழந்தையைச் சாலையில் உயிருக்குப் போராட விட்டுவிட்டுச் சென்றிருக்கக் கூடாது.

இது பெரிய தவறு தான். அதை நாம் ஒப்புக் கொள்வோம். ஆனால் குழந்தையின் தாய் அவரை முன் இருக்கையில் தனது மடியில் அமர வைத்ததும் ஆபத்தான செயல்” என்று பாபுல் சுப்ரியோ மேலும் தெரிவித்துள்ளார்.