Home இந்தியா விபத்தின் போது தன்னை மீட்ட மருத்துவருக்கு நடிகை ஹேமமாலினி விருந்து!

விபத்தின் போது தன்னை மீட்ட மருத்துவருக்கு நடிகை ஹேமமாலினி விருந்து!

563
0
SHARE
Ad

hema_maliniமும்பை, ஆகஸ்ட் 4 – ராஜஸ்தானின் தவுசா பகுதியில் கார் விபத்தில் சிக்கிய தன்னை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவருக்கு நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினி, தனது வீட்டிற்கே அழைத்து விருந்து அளித்து நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், ராஜஸ்தான் மாநிலம் தவுசா என்ற இடத்தில் ஹேமமாலினியின் கார், மற்றொரு காருடன் விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் எதிரே வந்த காரில் தன் பெற்றோருடன் பயணித்த 4 வயது குழந்தை சோனம் பரிதாபமாகப் பலியானாள். இந்த விபத்து குறித்து, இரு சாராரும் ஒருவரை மாற்றி ஒருவர், குற்றம் சுமத்தி வந்தனர். இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், நடிகை ஹேமமாலினி தன்னை மீட்ட தனியார் மருத்துவமனை மருத்துவரான சிவ்குமார் சர்மாவை தனது வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தார்.

ஹேமமாலினியின் அழைப்பை ஏற்ற சிவ்குமார் சர்மா, சமீபத்தில் ஹேமமாலினியின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். அவருக்கு விருந்தளித்த ஹேமமாலினி, தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் எழுதி உள்ள கடிதத்தில், “தொலைவு உள்ளிட்ட பிற எந்த சாத்தியங்களையும் நினைத்து ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், என்னை பாதுகாப்பாக ஜெய்பூரில் பொருத்தமான மருத்துவமனையில் அனுமதித்தீர்கள் அதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ஜெயமாலினியை மருத்துவமனைக்கு அழைத்துப் போனவர்கள், துடித்துக் கொண்டிருந்த எனது மகளையும் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தால், அவள் இறந்திருக்கமாட்டாள் என்று குழந்தை சோனமின் தந்தை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.