Home இந்தியா ஜெயலலிதா அரசின் ஆயுள் எண்ணப்படுகிறது – வைகோ ஆவேசம்!

ஜெயலலிதா அரசின் ஆயுள் எண்ணப்படுகிறது – வைகோ ஆவேசம்!

653
0
SHARE
Ad

Vaikoசென்னை, ஆகஸ்ட் 3 – மதுவிலக்கு கோரி போராடிய மாணவர்களுக்கு, காவல்துறையினரால் கொடுக்கப்பட்ட அடி ஒவ்வொன்றும் ஜெயலலிதா அரசுக்கு விழப்போகும் அடி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவ – மாணவியர், இன்று அமைந்தக்கரை பகுதியில் மதுக்கடைக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தின் இறுதியில், மதுக்கடையை நோக்கி கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாணவ-மாணவியரை அடித்து தாக்குதல் நடத்தி அந்த பகுதியில் இருந்து விரட்டி அடித்தனர். பலரை கைதும் செய்தனர்.

இந்த விவகாரத்தில், அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும்  நிலையில், வைகோ பத்திரிக்கையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “மதுவிலக்கு கோரி போராடிய மாணவர்களுக்கு, காவல்துறையினரால் கொடுக்கப்பட்ட அடி ஒவ்வொன்றும் ஜெயலலிதா அரசுக்கு விழப்போகும் அடி என்பதை எச்சரித்துக் கொள்கிறேன். இதுபோன்ற செயல்பாடுகள் மூலம் ஜெயலலிதா அரசின் ஆயுள் எண்ணப்படுகிறது.”

#TamilSchoolmychoice

“மாணவ, மாணவிகளை பூட்ஸ் காலால் காவல்துறையினர் உதைத்தது கடும் கண்டனத்திற்குரியது. நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும். வகுப்பறையை விட்டு வெளியேறி மதுவுக்கு எதிராக போராட மாணவர்கள் முன்வர வேண்டும். மதுக்கடைகளை மூட மாணவர்களால் தான் முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.