Home Featured உலகம் எம்எச் 370: பத்திரிக்கையாளர்களால் ஆக்கிரமிக்கப்படும் ரியூனியன் கடற்கரைகள்!

எம்எச் 370: பத்திரிக்கையாளர்களால் ஆக்கிரமிக்கப்படும் ரியூனியன் கடற்கரைகள்!

757
0
SHARE
Ad

ரியூனியன், ஆகஸ்ட் 3 – ஆப்பிரிக்கக் கண்டத்தின் அருகில், பரந்து விரிந்து கிடக்கும் இந்து மகா சமுத்திரத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறிய தீவு ரியூனியன். உலக வரைபடத்தில்கூட நீங்கள் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்க்கும்.

ஆனால், கடந்த சில நாட்களாக, உலகின் அனைத்து முக்கிய தகவல் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறி நாள்தோறும் இடம் பெற்று வருகின்றது ரியூனியன் தீவு.

Reunion-MH370-Debris-searchரியூனியன் தீவின் செயிண்ட் டெனிஸ் பகுதியில் உள்ள கடற்கரையில் அனைத்துலக தொலைக்காட்சி நிலையங்களின் ஒரு குழுவினர் நேற்று (ஆகஸ்ட் 2) தங்களின் சாதனங்களை அமைத்துக் கொண்டு செய்திகளை வெளியிட முற்படும் காட்சியைத்தான் மேலே காண்கிறீர்கள்.

#TamilSchoolmychoice

காணாமல் போன எம்எச் 370 விமானத்தின் கதவின் ஒரு பகுதி என நம்பப்படும் பொருள் ஒன்று ரியூனியன் கடற்கரையில் நேற்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானம் குறித்து மாதக் கணக்கில் நீண்டுகொண்டிருக்கும் விசாரணைகள் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காணாமல் போன  எம்எச் 370 மாதிரியிலான விமானத்தின் கதவு இது என்று மலேசிய அதிகாரிகள் தொடர்ந்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

MH370-TV Crew-ReUnion-Beach-

படம்: EPA