Home Featured வணிகம் மியான்மரில் மலாயன் வங்கியின் கிளை திறப்பு!

மியான்மரில் மலாயன் வங்கியின் கிளை திறப்பு!

792
0
SHARE
Ad

MAYBANKயங்கோன், ஆகஸ்ட் 3 – மியான்மரில், மலாயன் வங்கி தனது கிளையை இன்று திறந்தது. வங்கி அமைப்பதற்கான இறுதிக்கட்ட உரிமம், கடந்த வாரம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் முதல் மலேசிய வங்கியாக மலாயன் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது.

இது தொடர்பாக மலாயன் வங்கியின் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டு, அக்டோபர் மாதத்தின் முதல் தேதியில், மியான்மரின் மத்திய வங்கி, மலாயனின் கிளையை அங்கு அமைப்பதற்கான உரிமத்தை வழங்கியது. கடந்த வாரம், இது தொடர்பான இறுதி உரிமம் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, யங்கோனில் மலாயனின் செயல்பாடுகள் தொடங்கின.”

“இந்த கிளையில், மொத்த மற்றும் கூட்டாண்மை வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து வங்கி சார்ந்த சேவைகள் செய்து கொடுக்கப்படும். மேலும், மியான்மரில் தற்போது வளர்ந்து வரும் தொலைத்தொடர்புத்துறை பிரிவுகள், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள் போன்றவற்றில் மலாயன் தனது நிதி சார்ந்த நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி பல்வேறு மேம்பாடுகளை மேற்கொள்ளும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தென்கிழக்கு ஆசியாவில், சொத்துமதிப்பில் நான்காவது இடத்தில் இருக்கும் மலாயன் வங்கி, மியான்மரில் தனது கிளையைத் திறந்ததன் மூலம், அந்நாட்டிற்கு தற்போது அதிகம் தேவைப்படும் நிதி சார்ந்த மூலதனம் மற்றும் நிபுணத்துவம் ஓரளவிற்கு தன்னிறைவு அடைய வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்படுகிறது.