இது தொடர்பாக நத்தம் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலிங்கப்பட்டியில் உள்ள ஒரு மதுபானக் கடையை மூட வலியுறுத்தி 1-ம் தேதி அன்று அங்கு ஒரு போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் வைகோவின் தாயாரும் பங்கேற்றார். ஆனால், 2-ம் தேதி வைகோ முன்னிலையில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில், வைகோவின் தாயார் கலந்து கொள்ளவில்லை.”
“அப்படியென்றால், 2-ம் தேதி வன்முறை வெடிக்கும், மதுபானக் கடை சூறையாடப்படும் என்பதால் தான் தனது தாயாரை கலந்து கொள்ள வேண்டாம் என்று வைகோ கூறியுள்ளாரா? வைகோவின் தாயார் கலந்து கொள்ளாததிலிருந்தே கலிங்கப்பட்டியில் நடைபெற்ற கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதோ? என்ற சந்தேகம் எழுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.