Home இந்தியா ஊழல் செய்ய அனுமதித்துவிட்டு மௌனம் காப்பது ஏன்?: மோடிக்கு ராகுல் கேள்வி

ஊழல் செய்ய அனுமதித்துவிட்டு மௌனம் காப்பது ஏன்?: மோடிக்கு ராகுல் கேள்வி

538
0
SHARE
Ad

rahul_gandhiபுதுடெல்லி, ஜூலை 10- பாரதிய ஜனதா ஆட்சியில் நாடு முழுவதும் ஊழல் மலிந்துவிட்டதாகக் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் உட்பட பல மாநிலங்களில் ஊழல்கள் நடைபெற அனுமதித்த பிரதமர் மோடி, அவை குறித்துக் கேள்வி எழுப்பும்போது மட்டும் மௌனம் காப்பது ஏன்? என்றும் அவர் கேட்டுள்ளார்.

நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மீது பல்வேறு ஊழல்கள் புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை? என்றும் ராகுல் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

“தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார். ‘பிரதமரானால் நானும் ஊழல் செய்ய மாட்டேன். ஊழல் செய்ய எவரையும் அனுமதிக்க மாட்டேன்” என்று அவர் முழக்கமிட்டார்.

அப்படியானால், ராஜஸ்தானில் முறைகேடு நடைபெற நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? லலித் மோடியை இந்தியாவுக்குக் கொண்டு வர நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? இந்தக் கேள்விகளுக்குப் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்” என்றார் ராகுல்.

ராகுல் இவ்வாறு கேள்வி எழுப்பிய ஒன்றிரண்டு மணி நேரத்திற்குள் பாஜக தரப்பில் சூட்டோடு சூடாகப் பதிலடி கொடுக்கப்பட்டது.

பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன், செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பாஜ., ஆட்சியில் எத்தகைய ஊழல் முறைகேடுப் புகார்கள் எழுந்தாலும், அது குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

“ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற எந்த ஊழல் முறைகேடுகளும் முறையாக விசாரிக்கப்படவில்லை. அந்தக் காலகட்டத்தில் ஊழல் புகார்கள் எழுந்தபோது ஆட்சியாளர்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள்.

இப்போது வீராவேசமாகப் பேசும் ராகுல் காந்தியோ, அப்போது வாய் மூடி மௌனியாக இருந்தார்” என்று காட்டத்துடன் விமர்சித்தார் ஷா நவாஸ் உசேன்.