Home இந்தியா ஒரு ரூபாயில் விமானத்தில் பயணிக்கலாம்: ஸ்பைஸ் ஜெட்  சலுகை

ஒரு ரூபாயில் விமானத்தில் பயணிக்கலாம்: ஸ்பைஸ் ஜெட்  சலுகை

553
0
SHARE
Ad

spicejet-03புதுடில்லி, ஜூலை 15- ஒரு ரூபாய்க் கட்டணத்தில் விமானப் பயணம் செய்யும் திட்டத்தை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் கைபேசிப் பயன்பாட்டு முறை (மொபைல் அப்ளிகேஷன்) மூலம் ஒரு ரூபாய்க்கு விமானப் பயணச் சீட்டு வாங்க வேண்டும். ஒரு ரூபாய்க் கட்டணம் தவிர, வரிகள் மற்றும் இதரக் கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

இச்சலுகையில், ஜூலை 15-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதிக்குள் பயணிக்க முடியும்.

#TamilSchoolmychoice

கண்டிப்பாக இரண்டு வழித் தடங்களுக்கான பயணச் சீட்டு வாங்கப்பட வேண்டும் என்றும், முதல் வழிப் பயணத்திற்கு ஒரு ரூபாய் கட்டணமாகவும்,மற்றைய பயணத்திற்குச் சாதாரணக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது

இந்தச் சலுகைத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் இருக்கைகளுக்கான பயணச் சீட்டு மட்டுமே விற்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயணச்சீட்டு விற்பனை புதன்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கி 17-ஆம் தேதி நள்ளிரவு வரை அதாவது 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.