Home கலை உலகம் எம்.எஸ்.வி-யின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

எம்.எஸ்.வி-யின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

531
0
SHARE
Ad

ms-viswanathanசென்னை, ஜூலை 15- மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல் , இசைக் கலைஞர்களின் இசை அஞ்சலியுடன் இன்று பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

தற்போது சென்னை சாந்தோமில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கி விட்டது.

ஏராளமான திரைப்படத் துறையினரும் முக்கியப் பிரமுகர்களும் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

எம்.எஸ்.வி- யின் மறைவிற்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக இன்று சினிமாப் படப்பிடிப்புகளும், படத்தொகுப்பு( எடிட்டிங்), குரல் பதிவு( டப்பிங்), இசைச் சேர்ப்பு( ரீ ரிகார்டிங்) போன்ற சினிமா தொடர்பான அனைத்துப் பணிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.