Home கலை உலகம் எம்.எஸ்.விஸ்வநாதன் உருவப்படத்தை இளையராஜா திறந்து வைக்கிறார்

எம்.எஸ்.விஸ்வநாதன் உருவப்படத்தை இளையராஜா திறந்து வைக்கிறார்

1058
0
SHARE
Ad

mசென்னை, ஆகஸ்டு 1- இசைஞானி இளையராஜா முன்னிலையில், திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம், மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விழாவை நாளை நடத்தவிருக்கிறது.

இவ்விழா நாளை மாலை 6 மணிக்குச் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கக் கலையரங்கத்தில் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாகச் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்விழாவில் அவரது நினைவைப் போற்றும் விதத்தில் இன்னிசைக் கச்சேரியும், அதைத் தொடர்ந்து எம்.எஸ்.விஸ்வநாதனின் முழுத் திருவுருவப் படத்தை இளையராஜா திறந்து வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

#TamilSchoolmychoice