Home நாடு நஜிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: 10 பேர் கைது!

நஜிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: 10 பேர் கைது!

601
0
SHARE
Ad
unnamed

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும், அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தும் #TangkapNajib ஆர்ப்பாட்டம் இன்று மதியம் தலைநகர் சோகோ வணிக வளாகத்தில் 2 மணியளவில் தொடங்கியது.

இந்நிலையில், மதியம் 2.30 மணியளவில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகுவின் உதவியாளர் ஜெய் ஜெய் டெனிஸ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.