Home இந்தியா யாகூப் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் தீவிரவாதிகள்: திரிபுரா ஆளுநர் கருத்து!

யாகூப் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் தீவிரவாதிகள்: திரிபுரா ஆளுநர் கருத்து!

500
0
SHARE
Ad

yaபுதுடெல்லி, ஆகஸ்டு 1- தூக்கிலிடப்பட்டமும்பை தொடர்க் குண்டுவெடிப்புக் குற்றவாளி யாகூப் மேமனின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்களில் தீவிரவாதிகளும் ஊடுருவியிருந்தனர் எனத் திரிபுரா ஆளுநர் ததகட்டராய் தனது டுவிட்டர் தெரிவித்துள்ளார். இக்கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

திரிபுரா ஆளுநர் ததகட்டராய் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது:–

“யாகூப் மேமனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட உறவினர்களையும் நெருங்கிய நண்பர்களையும் தவிர, மற்ற அனைவரையும் உளவுத்துறையினர் கண்காணிக்க வேண்டும்.ஏனெனில், அவர்களில் பலர் தீவிரவாதிகள்.

#TamilSchoolmychoice

ஒரு மாநிலத்தின் பாதுகாப்பு குறித்துக் கவலைப்பட வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருக்கிறது.அதனால்தான் சொல்கிறேன். வரும் முன் காப்பதே சிறந்தது என்பதால், யாகூப்பின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை உளவுத்துறை கண்காணிக்க வேண்டும்”என்று கூறியுள்ளார்.

இதனால், யாகூப் மேமனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.‘முஸ்லிம் இனத்தவரை இது சந்தேகிக்க வைக்கிறது’ என்று இக்கருத்திற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

யாகூப் மேமன் இறுதிச் சடங்கிற்குப் பலத்த காவல்துறைப் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தும், தீவிரவாதிகளின் ஊடுருவல் எப்படிச் சாத்தியம் ஆகியிருக்கும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்குப் பின்வருமாறு அவர் தனது டுவிட்டரில் பதில் தெரிவித்திருக்கிறார்.

“நான் குறிப்பிட்ட சமூகத்தைத் தாக்குவதாகச் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். நான் எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பிடவில்லை. எனவே என் மீது மத சகிப்புத் தன்மையில்லாதவர் என்று குற்றம் சாட்ட முடியாது.பொதுநல விவகாரத்தைப் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவது எனது பணி” எனப் பதிலிறுத்துள்ளார்.