Home உலகம் சிங்கப்பூரில் தமிழருக்குப் பாதுகாப்புப் படை விருது வழங்கிக் கெளரவம்!

சிங்கப்பூரில் தமிழருக்குப் பாதுகாப்புப் படை விருது வழங்கிக் கெளரவம்!

443
0
SHARE
Ad

siசிங்கப்பூர்,ஆகஸ்டு 1- சிங்கப்பூரில் நடந்த விபத்தில் கனரக வாகனத்திற்கு அடியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த ஒருவரைக் காப்பாற்றிய தமிழருக்குச் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை விருது வழங்கிக் கெளரவித்துள்ளது.

தென் கொரியாவைச் சேர்ந்த கிம் செயாங் மோ என்பவர் தொழில் நிமித்தமாகச் சிங்கப்பூர் வந்திருந்த போது, கனரக வாகனம்(பெரிய டிரைலர் லாரி) மோதியதில் அதன் சக்கரத்திற்கடியில் சிக்கிக் கொண்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநர் இறங்கி ஓடிவிட்டார்.

அச்சமயத்தில் அவ்வழியாக வந்த ஆசிப் இக்பால் என்ற தமிழர் பதறியடித்து ஓடி வந்து, துணைக்குச் சிலரை அழைத்து, லாரிக்கு அடியில் சிக்கித் துடித்துக் கொண்டிருந்த அந்த நபரை மீட்டு, அவசரச் சிகிச்சை வாகனத்திற்கும் தகவல் கொடுத்து வரவழைத்து மருத்துவமனையில் சேர்த்தார்.

#TamilSchoolmychoice

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நபரை மீட்டுச் சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்ததால்,அவர் உயிர் பிழைத்துக் கொண்டார். அந்நபர் தன் உயிரைக் காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

அவரைக் காப்பாற்றிய தமிழர் ஆசிப் இக்பால் காஞ்சீபுரத்தைச் சேர்ந்தவர். சிங்கப்பூரில் கணினி மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றுபவர்.

இந்தச் சேவையைப் பாராட்டிச் சிங்கப்பூர் அரசு, அவர் உட்பட 16 பேருக்குச் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை விருது வழங்கிக் கெளரவப்படுத்தியுள்ளது..