Home கலை உலகம் எம்.எஸ்.விஸ்வநாதனின் ஆத்மசாந்திக்காக இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இளையராஜா!  

எம்.எஸ்.விஸ்வநாதனின் ஆத்மசாந்திக்காக இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இளையராஜா!  

946
0
SHARE
Ad

ilaiyaசென்னை, ஜூலை21- மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவையொட்டி, 27–ஆம் தேதி மாலை 6 மணிக்குச் சென்னை காமராஜர் அரங்கில், இசை ஞானி இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார்.

இதுபற்றி இளையராஜா கூறியதாவது:–

‘‘எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணனின் இசைத்திறமையும், ஆளுமையும் அனைவரும் அறிந்ததே. அவரின் இந்த இசை நுணுக்கங்களை நான் அறிந்த அளவுக்கு வேறு யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த இசை நுணுக்கங்களை எல்லாம் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் வகையில், சிறு இசைக்குழுவினருடன் நான் வாசித்துக் காட்ட இருக்கிறேன்.

#TamilSchoolmychoice

எவ்வளவு பெரிய உயர்வான விசயங்களை எப்படி சர்வசாதாரணமாக அவர் செய்து காட்டியிருக்கிறார்? என்பதை நான் மக்களுக்குத் தெரியப்படுத்தப் போகிறேன். இசையில் ஒவ்வொருவருடைய கற்பனையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். நம் உயிரை எங்கோ அழைத்துச் செல்கின்ற உணர்வைக் கொண்டு வருவது அவ்வளவு சாதாரணமான விசயம் அல்ல.

இதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். இதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதால், இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். அவர் உடலை விட்டு உயிர் பிரிந்து சென்றாலும், அவர் என்றும் மறையாத நித்ய சொரூபர். எம்.எஸ்.வி.யின் இசைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும்.’’என்றார் அவர்.