சென்னை,ஜூலை 21- தலைமைச் செயலகத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டமும், அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்ப்பினர்கள் கூட்டமும் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக நேற்று பிற்பகல் 12.50 மணிக்குத் தலைமைச் செயலகத்துக்கு ஜெயலலிதா வந்தார்.
இந்தக் கூட்டத்தில், செப்டம்பர் 9 மற்றும் 10–ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள உலகளாவிய முதலீட்டாளர் மாநாடு குறித்த ஆலோசனை நடைபெற்றது.
மேலும்,அரசுத் துறைகளின் மானியக்கோரிக்கைகள் தொடர்பான கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது..
பிற்பகல் 12.52 மணிக்குத் தொடங்கிய அமைச்சரவைக் கூட்டம் 1.12 மணி வரை நீடித்தது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்:
மேலும்,பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளதை முன்னிட்டு, ஜெயலலிதா தலைமையில்,அதிமுக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டமும் நேற்று நடைபெற்றது.
அப்போது, பாராளுமன்றக் கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்.