Home கலை உலகம் சிங்கப்பூரில் அஸ்ட்ரோ விண்மீன் எச்டி – சிங்டெல் டிவியில் ஜூலை 1 முதல் ஒளிபரப்பாகி வருகின்றது...

சிங்கப்பூரில் அஸ்ட்ரோ விண்மீன் எச்டி – சிங்டெல் டிவியில் ஜூலை 1 முதல் ஒளிபரப்பாகி வருகின்றது (பிரத்யேக செய்தி)

1058
0
SHARE
Ad

231_300கோலாலம்பூர், ஜூலை 15 – மலேசியா மற்றும் தெற்கு ஆசியாவின் முன்னணி ஒருங்கிணைந்த வாடிக்கையாளர் ஊடகப் பொழுதுபோக்கு குழுமமான அஸ்ட்ரோ, தனது விண்மீன் எச்டி அலைவரிசையின் மூலமாக, சிங்கப்பூரிலும் கால்பதித்துள்ளது.

தெற்கு ஆசியாவின் முதல், 24 மணிநேர தமிழ்ப் பொழுதுபோக்கு அலைவரிசை என்ற சிறப்பு வாய்ந்த அஸ்ட்ரோ விண்மீன் எச்டி, கடந்த 1 ஜூலை 2015 முதல் சிங்கப்பூரின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான சிங்டெல் டிவியின் வழியாக அந்நாட்டில் ஒளிபரப்பாகின்றது.

அஸ்ட்ரோ தயாரிப்பு தமிழ் அலைவரிசைகள் மலேசியாவைத் தாண்டி சிங்கப்பூரில் கால்பதிப்பது இது இரண்டாவது முறையாகும். காரணம் ஏற்கனவே, கடந்த ஆண்டு வெள்ளித்திரை அலைவரிசையின் மூலமாக அஸ்ட்ரோ, சிங்டெல் டிவி (இதற்கு முன் மியோ டிவி என்று அழைக்கப்பட்டது) உடன் விநியோக ஒப்பந்தம் செய்து கொண்டது.

#TamilSchoolmychoice

இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த விநியோக ஒப்பந்தம், அஸ்ட்ரோ தயாரிப்பு தமிழ் அலைவரிசைகளின் தரத்தையும், தேவையையும் மறு உறுதிப்படுத்துகின்றது. குறிப்பாக உலக அளவிலும், வட்டார ரீதியிலும் அஸ்ட்ரோவின் துல்லிய அலைவரிசையில் ஒளிப்பரப்பாகும் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இது குறித்து அஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் மூத்த துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து கூறுகையில், “சிங்டெல் டிவியின் வழியாக அஸ்ட்ரோ விண்மீன் எச்டி நிகழ்ச்சிகளை சிங்கப்பூரில் அறிமுகம் செய்கின்றோம். இந்த வட்டாரத்தின் முன்னணி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, தயாரிப்பு, விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வரும் அஸ்ட்ரோ, தொடர்ந்து தரமான தமிழ் நிகழ்ச்சிகளை மலேசியா மற்றும் அனைத்துலக அளவில் வழங்க உறுதியெடுத்துள்ளது. சிங்கப்பூரில் அஸ்ட்ரோ விண்மீன் எச்டி எதிர்பார்க்கும் இலக்கை அடைந்து வாடிக்கையாளர்களைக் கவரும் என்று நான் நம்புகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

24 மணி நேரமும் தமிழ்ப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் அஸ்ட்ரோ விண்மீன் எச்டி அலைவரிசை, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ரியாலிட்டி ஷோக்கள், வாழ்வியல் நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், பயண நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், ஆவணப்படங்கள், இசை, புத்தம் புதிய படங்கள் எனத் துல்லிய ஒளிபரப்பில், முதல் முறையாக சிங்கப்பூரில் சிங்டெல் டிவி மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு அதன் வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வருகின்றது.

ஒரு தமிழ் அலைவரிசை கொடுக்க வேண்டிய அத்தனை பொழுதுபோக்கு அம்சங்களையும் மிகச் சிறப்பாக வழங்கி வரும் அஸ்ட்ரோ விண்மீன் எச்டி, நவீன, பாரம்பரிய நிகழ்ச்சிகள் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.