Home நாடு அன்வார் நிரபராதி – மன்னிப்புக் கேட்கிறார் சைபுலின் தந்தை

அன்வார் நிரபராதி – மன்னிப்புக் கேட்கிறார் சைபுலின் தந்தை

617
0
SHARE
Ad

anwar saiful

கோலாலம்பூர், மார்ச் 8 – கடந்த 2009 ஆம் ஆண்டு மலேசியாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நீதிமன்ற வழக்குகளில் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட ஓரினப்புணர்ச்சி வழக்கும் ஒன்று. இவ்வழக்கில், கோலாலம்பூரிலுள்ள ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் 2008 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26ஆம் தேதி தனது உதவியாளர் சைபுலை ஓரினப்புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக அன்வார் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பிறகு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மலேசிய உயர்நீதி மன்றம், போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி அன்வாரை விடுதலை செய்தது.

இந்நிலையில், இவ்விஷயத்தில் புதிய திருப்பமாக சைபுலின் தந்தை அஸ்லான் மொஹத் லாஸிம் (வயது 60)  தானாக முன்வந்து  இன்று செய்தியாளர் கூட்டமொன்றை ஏற்பாடு செய்து அதில்,அன்வார் நிரபராதி என்றும், இதில் தன்னுடைய மகன் பல நேர்மையற்ற அரசியல் தரப்புகளால் (பிரதமர் நஜிபின் சிறப்பு அதிகாரி கைரில் அன்னாஸ் உட்பட ),அன்வாருக்கு எதிராக உருவாக்கப்பட்ட அரசியல் சதியில் பயன்படுத்தப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அன்வாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இவ்வழக்கால் ஏற்பட்ட தலைகுனிவை எண்ணி தான்  வருந்தி, அவர்களிடம் மன்னிப்புக் கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வழக்கு தொடர்பான மேல்முறையீடு வரும் ஜூலை 22ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு வரும்.