புதுடெல்லி, ஜூலை 16- ராஜஸ்தானின் ஜெய்சால்மர் விமானப்படை தளத்தில் இருந்து ஆய்வுப்பணிகளுக்காக அனுப்பப்பட்ட ஆளில்லா விமானம் ஒன்று, இயந்திரக் கோளாறு காரணமாக அதிகாலை 1 மணியளவில் விமானப்படைத் தளத்தின் அருகே உள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது.
விழுந்த பகுதி காட்டுப்பகுதி என்பதால், உயிர்ச் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை.
விமானம் விழுந்து நொறுங்கிய இடம், பாகிஸ்தான் எல்லையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் என்றாலும், இதில் நாசவேலைக்கான வாய்ப்பு எதுவும் இல்லை என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,