Home உலகம் 70 ஆண்டுகால சட்டத்தை மாற்றிய சின்சோ அபே – ஜப்பானியர்கள் கடும் எதிர்ப்பு!

70 ஆண்டுகால சட்டத்தை மாற்றிய சின்சோ அபே – ஜப்பானியர்கள் கடும் எதிர்ப்பு!

808
0
SHARE
Ad

japanடோக்கியோ, ஜூலை 16 – அண்டை நாடுகளுடன் போர் குறித்த 70 ஆண்டுகால வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்ததற்காக ஜப்பான் பிரதமர் சின்சோ அபேக்கு எதிராக லட்சக்கணக்கான ஜப்பானியர்கள், இன்று பேரணி நடத்தினர். எனினும் அத்தனை எதிர்ப்புகளையும் மீறி, ஜப்பான் பாராளுமன்ற கீழ் சபை, அபேயின் இரு தீர்மானங்களை ஆதரித்து சட்டமாக்கியது.

இரண்டாம் உலக போர் நடைபெற்ற போது, அமெரிக்காவின் அணு ஆயுத தாக்குதலுக்கு பல லட்சம் உயிர்களை பலி கொடுத்த ஜப்பான், இனி அண்டை நாடுகளுடன் போர் இல்லை என்ற தீர்மானத்தை 70 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தில் தான் சின்சோ அபே மாற்றம் கொண்டு வந்துள்ளார். அதன் படி, ஜப்பானின் பாதுகாப்பிற்கோ அல்லது நட்பு நாடுகளுக்கு போர் அச்சுறுத்தல் ஏற்படும் பொழுதோ, வேறு வழியே இல்லாத சூழலில், ஜப்பான் தனது இராணுவத்தை பயன்படுத்தும்.

japan1இதற்கு அரசியல் ரீதியாக பெரும்பாலானோர் ஆதரவு அளித்தாலும், ஜப்பானிய மக்கள் போர் தொடர்பான தீர்மானங்களை விரும்பவில்லை. இந்நிலையில், அவர் ஏற்படுத்திய பேரணியில், போர் வேண்டாம், கொலை வேண்டாம் என்ற பதாகைகளுடன் தங்கள் எதிர்ப்பை காட்டினர். எனினும், அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஜப்பானின் பாதுகாப்பு கருதி இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, ஜப்பானின் இந்த தீர்மானங்களுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் அமைதி வழியில் மாறுதல் செய்ய வேண்டாம். இதனால் அண்டை நாடுகளுடன் குழப்பம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. எனினும், ஜப்பானின் நட்பு நாடுகள் இதனை வரவேற்றுள்ளன.

ஜப்பானின் இந்த அதிரடியான முடிவிற்கு சீனாவின் தொடர் அச்சுறுத்தல்கள் தான் முக்கிய காரணம் என்பது பட்டவர்த்தனமான உண்மை.