Home உலகம் ராஜபக்சே எதிர்ப்பால் சிறிசேனாவுக்குக் கடும் நெருக்கடி: அமைச்சர்கள் விலகல்!

ராஜபக்சே எதிர்ப்பால் சிறிசேனாவுக்குக் கடும் நெருக்கடி: அமைச்சர்கள் விலகல்!

824
0
SHARE
Ad

MaithripalaSirisena_bகொழும்பு, ஜூலை 17- இலங்கையில் அடுத்த மாதம் 17–ந் தேதி நடக்கும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே ஆர்வமாக உள்ளார். ஆனால் இதற்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

சமீபத்தில் சிறிசேனா தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்சேவின் நடவடிக்கைகள், அவருடைய ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விமர்சனம் செய்தார்.

மேலும், தேர்தலில் போட்டியிட்டால் ராஜபக்சே மீண்டும் தோற்பது உறுதி. எங்களுடைய கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றாலும் ராஜபக்சேவைப் பிரதமராக அனுமதிக்க மாட்டேன்”என்றார்.

#TamilSchoolmychoice

ஆரம்பத்தில் இருந்தே சுதந்திரக் கட்சி சார்பில் ராஜபக்சே பிரதமராகப் போட்டியிடுவதை சிறிசேனா விரும்பவில்லை. கட்சியிலுள்ள ராஜபக்சே ஆதரவு அமைச்சர்கள் வற்புறுத்தியதன் பேரிலேயே, வேறு வழியின்றி அதற்குச் சம்மதம் சொன்னார்  சிறிசேனா.

ஆனாலும்,தன் விரும்பாமையை அவர் அடிக்கடி வெளிப்படுத்தினார்.

இதனால் வேதனையடைந்த மூன்று முக்கிய அமைச்சர்கள் அவருடைய அமைச்சரவையில்  இருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், சிறிசேனாவின் ராஜபக்சே வெறுப்புப் பேச்சால் நாங்களும், எங்களுடைய கூட்டணிக் கட்சித் தலைவர்களும் மிகவும் வேதனை அடைந்துள்ளோம். இதனால் ராஜினாமா முடிவுக்கு வந்துள்ளோம் என்றனர்.

முக்கிய அமைச்சர்களின் இந்தத் திடீர் முடிவால் சிறிசேனாவுக்குக் கடும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.