Home உலகம் எரிமலைச் சாம்பல் பரவலால் இந்தோனேசியாவில் விமான நிலையங்கள் மூடப்பட்டன

எரிமலைச் சாம்பல் பரவலால் இந்தோனேசியாவில் விமான நிலையங்கள் மூடப்பட்டன

602
0
SHARE
Ad

ஜாகர்த்தா, ஜூலை 17 – இந்தோனிசியாவின் ஜாவா தீவில் உள்ள ராவுங் எரிமலை, தீப்பிழம்புகளைக் கக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, வெளியான சாம்பல் மேக மூட்டத்தினால், இந்தோனிசியாவின் 6 விமான நிலையங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன.

Raung Eruption-Bali Airport Closed-பாலித் தீவின் விமான நிலையத்தில்….

நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையத்தைக் கொண்டிருக்கும் சுரபாயா ஆகியவை உள்ளிட்ட ஆறு நகரங்களின் விமான நிலையங்கள் தற்போது, இந்த எரிமலை கக்கிய சாம்பல்களால் சூழப்பட்ட காரணத்தால் மூடப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இன்று நோன்புப் பெருநாளை முன்னிட்டு பல இந்தோனிசியர்கள் தங்களின் இல்லங்களுக்குத் திரும்ப முற்பட்டிருக்கும் வேளையில் இந்த விமான நிலைய மூடல்கள் அவர்களின் பயணங்களைப் பெருமளவில் பாதித்திருக்கின்றன.