Home இந்தியா நக்கீரன் பத்திரிக்கை மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு

நக்கீரன் பத்திரிக்கை மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு

722
0
SHARE
Ad

jayalalitha (1)சென்னை, ஜூலை 17- சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில், சென்னை நகர அரசுத் தலைமை வழக்கறிஞர், நக்கீரன் வாரப் பத்திரிக்கைக்கு எதிராக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

“நக்கீரன் வாரப் பத்திரிக்கையில் 15-ஆம் தேதி அன்று,’ ஜெயலலிதாவுக்கு டயாலசிஸ்: கார்டன் ரிப்போர்ட்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரைச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்தச் செய்தி அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக உள்ளது.

உண்மையில்லாத செய்தியைக் களங்கம் ஏறபடுத்த வேண்டும் என்கிற உள் நோக்கத்துடன் மட்டுமே வெளியிட்டுள்ளார்கள். எனவே, இந்த அவதூறு செய்தியை வெளியிட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால்,இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 500- ஆம் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.