Home நாடு உலகத் தமிழாராய்ச்சி மாநாடு : தமிழகப் பிரமுகர்கள் வருகை

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு : தமிழகப் பிரமுகர்கள் வருகை

379
0
SHARE
Ad
சுப.வீரபாண்டியன்

கோலாலம்பூர் :  11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, கோலாலம்பூரில் வெள்ளிக்கிழமை (21 ஜூலை 2023) தொடங்க இருக்கும் நிலையில், மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ் நாட்டு பிரமுகர்களும், அயல்நாட்டு பிரமுகர்களும் வருகை தரத் தொடங்கியுள்ளனர்.

பிரபல தமிழக இதழான நக்கீரன் ஆசிரியர் இராஜகோபால் மாநாட்டுக்காக வருகை தந்திருக்கிறார். தமிழ் நாட்டு அரசின் சமூகநீதி கண்காணிப்புக் குழுத் தலைவரும் தமிழக பாடநூல் குழு உறுப்பினருமான பேராசிரியர் சுப. வீரபாண்டியன், சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருமான வேல் முருகன், தமிழார்வலர் இரா.அருள்மணி சாமுவேல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி இளைஞரணி பொறுப்பாளர் பகுத்தறிவாளன் ஆகியோரும் கோலாலம்பூர் வந்தடைந்தனர்.

வேல்முருகன்

மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டை சனிக்கிழமை ஜூலை 22-ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கிறார்.