Home இந்தியா ஸ்டாலினுக்கு திடீர் நெஞ்சு வலி!

ஸ்டாலினுக்கு திடீர் நெஞ்சு வலி!

611
0
SHARE
Ad

stalinpirasaramசென்னை, ஜூலை 19 – திமுக பொருளாளர் ஸ்டாலின், கடலுார் அருகே பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு திரும்புகையில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, அவரின் இருப்பிடத்திற்கு வந்த மருத்துவர்கள் குழு, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

2016-ம் ஆண்டு, பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, ஸ்டாலின் பல்வேறு இடங்களில் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். கடலுார் மாவட்டம் புதுச்சத்திரத்தில்,நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில், ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். பொதுக் கூட்டம் முடிந்து, நேற்று இரவு கார் மூலமாக, சென்னைக்கு புறப்பட்டார்.

அவருக்கு, உணவகம் ஒன்றில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு சாப்பிட்ட விட்டு அங்கிருந்து புறப்பட்ட அவர், இரவு 9.00 மணி அளவில் புதுச்சேரியை நெருங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து, அவர் தங்கும் விடுதி ஒன்றில் ஓய்வு எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்டாலினை பரிசோதிக்க, இதய நோய் நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில், அவரது இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் இயல்பாக  இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடலுார், பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் சாப்பிட்ட மதியம் உணவு தான், அவருக்கு அஜீரணத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, சிறிது நேரம் ஒய்வு எடுத்துக் கொண்ட அவர், சுமார் 10.05 மணி அளவில் சென்னைக்கு புறப்பட்டார்.