Home இந்தியா டெல்லியில் நான்கு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்தது – 4 பேர் பலி!

டெல்லியில் நான்கு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்தது – 4 பேர் பலி!

499
0
SHARE
Ad

delhiபுதுடெல்லி, ஜூலை 19 – டெல்லியில் நான்கு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியானதாகவும், 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு டெல்லி, விஷ்ணு கார்டன் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் நான்கு மாடிக்கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். அப்பொழுது, இடிபாடுகளில் சிக்கி ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. மேலும், மூன்று பேர் மருத்துவமனைக்கு போகும் வழியில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

இரவு நேரம் என்பதால் இடிபாடுகளை அப்புறப்படுத்துவதில் தாமதமானதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர், உள்ளூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆகியோரும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் வெளியிட்டுள்ள தகவல் படி, இந்த இடிபாடுகளில் 15 முதல் 20 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.