Home இந்தியா இந்தியா–ரஷியா இணைந்து 200 ராணுவ ஹெலிகாப்டர்கள் தயாரிக்கத் திட்டம்

இந்தியா–ரஷியா இணைந்து 200 ராணுவ ஹெலிகாப்டர்கள் தயாரிக்கத் திட்டம்

387
0
SHARE
Ad

military helicopter(c)மாஸ்கோ, ஜூலை 20- இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து 200 ராணுவ ஹெலிகாப்டர்களைத் தயாரிக்க உள்ளன. இந்த ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் பி.எஸ். ராகவன் கூறியிருப்பது யாதெனில்:

“பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மிக நீண்ட காலமாக நல்லுறவு நீடிக்கிறது. ராணுவ ஒத்துழைப்பில் இருநாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என்று கூறுவது தவறான அல்லது அரைகுறையான தகவல் ஆகும்.

#TamilSchoolmychoice

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் இரு நாடுகளும் இணைந்து 200 ராணுவ ஹெலிகாப்டர்களைத் தயாரிக்க அண்மையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்திட்டத்தில் ஹெலிகாப்டர் தயாரிப்பதற்கான தொழில்நுட்பம், தயாரிப்பு உரிமம் ஆகியவற்றையும் ரஷ்யா வழங்குகிறது. இது இந்தியப் பாதுகாப்புத் துறையை மேலும் வலுவடையச் செய்யும்.

இந்திய ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்களில் சுமார் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை ரஷ்யாவிடம் இருந்தே இறக்குமதி செய்து வருகிறோம். இனி வரும் காலத்திலும் இந்த உறவு தொடரும்.

மேலும் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து ஐந்தாவது தலைமுறை போர் விமானங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளன. இதற்கான முதல்கட்ட வடிவமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இத்திட்டம் விரைவில் செயல்வடிவம் பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.