Home நாடு ரோஸ்மா வங்கிக் கணக்கு விவகாரம்: பேங்க் நெகாராவிற்கு கொடுக்கப்பட்ட அவகாசம் நிறைவு!

ரோஸ்மா வங்கிக் கணக்கு விவகாரம்: பேங்க் நெகாராவிற்கு கொடுக்கப்பட்ட அவகாசம் நிறைவு!

676
0
SHARE
Ad

Datin-Seri-Paduka-Rosmah-Mansorகோலாலம்பூர், ஜூலை 20 – பிரதமரின் மனைவி ரோஸ்மா மான்சோரின் வங்கிக் கணக்கு விவரங்கள் வெளியே கசிந்தது குறித்து விளக்கமளிப்பதற்காக, பேங்க் நெகாராவிற்குக் கொடுக்கப்பட்ட ஒரு வார கால அவகாசம் முடிந்து விட்ட நிலையில், அதன் நிலவரம் குறித்து கருத்து கூற ரோஸ்மாவின் வழக்கறிஞர்கள் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பேங்க் நெகாரா உங்களுடைய கோரிக்கைக்கு விளக்கமளித்தார்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ரோஸ்மாவின் வழக்கறிஞர் நூர்ஹார்ஜன் முகமட் நூர் நேரடியாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

கடந்த ஜூலை 9-ம் தேதி, சரவாக் ரிப்போர்ட் இணையதளம் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், ரோஸ்மாவின் வங்கிக் கணக்கிற்கு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி முதல் ஏப்ரல் 23-ம் தேதி வரையில், 2 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களை வெளியிட்டது. இந்த ஆவணங்களை மலேசிய விசாரணை அதிகாரிகள் கசியவிட்டதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

மேலும், ரோஸ்மாவின் வங்கிக் கணக்கிற்கு அப்பணம் எங்கிருந்து வந்தது என்று தெரியாது எனக் குறிப்பிட்டிருந்த சரவாக் ரிப்போர்ட், அப்பணத்தை பரிமாற்றம் செய்தவர் பிரதமர் துறையில் பணியாற்றும் ரோஸ்லான் சோஹாரி என்று தெரிவித்திருந்தது.