Home கலை உலகம் பா.ரஞ்சித் படத்தில் ரஜினிக்கு ஜோடி ராதிகா ஆப்தேவா?

பா.ரஞ்சித் படத்தில் ரஜினிக்கு ஜோடி ராதிகா ஆப்தேவா?

490
0
SHARE
Ad

rajinikanthசென்னை, ஜுலை20- அட்டைக்கத்தி மற்றும் மெட்ராஸ் படப் புகழ் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க, ராதிகா ஆப்தே ஒப்பந்தமாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராதிகா ஆப்தே யார் தெரியுமா? எப்பேர்ப்பட்ட நடிகை தெரியுமா?

ஆபாசப் படங்கள் மூலம் ஒட்டுமொத்த சமூக ஊடகங்களையே பரபரப்புக்கு உள்ளாக்கியவர் தான் இந்த ராதிகா ஆப்தே! அரை நிர்வாணமாக எடுக்கப்பட்ட இவரது புகைப்படங்கள் இணையதளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியலையை உண்டாக்கியது.

#TamilSchoolmychoice

மேலும், குறும்படம் ஒன்றில் இவர் நிர்வாணமாக நடித்த காட்சியும் வெளியாகி அதிகமாகப் பகிரப்பட்டன.

அப்படிப்பட்ட இவர், ரஜினி நடிக்கும் புதிய படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்க, ரஜினி நடிக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் மலேசியாவில் தொடங்கவிருக்கிறது.

இப்படத்தில் ரஜினியுடன், ‘அட்டக்கத்தி’தினே‌ஷ், ‘மெட்ராஸ்’கலையரசன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பது உறுதியாகிவிட்டது. ஆனாலும், இப்படத்தின் கதாநாயகி யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.கதாநாயகிக்கான தேர்வு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ராதிகா ஆப்தேவை இப்படத்தின் கதாநாயகியாகத் தேர்வு செய்துள்ளதாகக் தகவல் வெளியானது.

ஆனால், ராதிகா ஆப்தே இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவில்லை; ஒரு முக்கிய கதாபாத்திரத்திலேயே நடிக்கவிருக்கிறார் என்று இயக்குநர் தரப்பில் கூறப்படுகிறது.

.