கோலாலம்பூர், ஜூலை 20 – ‘சரவாக் ரிப்போர்ட்’ இணையதளத்திற்கு எதிரான எம்சிஎம்சி-ன் நடவடிக்கை, பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்னும் அதிகமான குற்ற உணர்விற்கு ஆளாகியிருப்பதைக் காட்டுகின்றது என ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.
இது குறித்து லிம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சரவாக் ரிப்போர்ட் இணையதளத்தை முடக்கியுள்ள நடவடிக்கை, நஜிப்பும், மலேசிய தகவல்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமும் (எம்சிஎம்சி), “நஜிப் குற்றமற்றவர் அல்ல” என்பதை மலேசியர்களுக்கும், உலக மக்களுக்கும் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பொய் என நிரூபிக்க நஜிப் தவறிவிட்டார் என்றும் லிம் கிட் சியாங் குறிப்பிட்டுள்ளார்.