Home நாடு சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் தண்டனையை இரத்து செய்ய மேல்முறையீடு

சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் தண்டனையை இரத்து செய்ய மேல்முறையீடு

436
0
SHARE
Ad

கோலாலம்பூர் : திரெங்கானு சுல்தானின் துணைவியார் சுல்தானா நூர் சாஹிரா மீது அவதூறு கூறியதற்காக சரவாக் ரிப்போர்ட் என்ற இணைய ஊடகத்தின் ஆசிரியர் கிளேர் ரியூகாசல்-பிரவுன் மீது 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த தீர்ப்பை எதிர்த்து கிளேர் ரியூகாசல் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 7) கிளேர் ரியூகாசலுக்கு கோலதிரெங்கானு கீழமை (மாஜிஸ்திரேட்) நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை வழங்கியது.

கிளேர் ரியூகாசல் அந்த நீதிமன்ற விசாரணையில் கலந்து கொள்ளவில்லை.

#TamilSchoolmychoice

‘”The Sarawak Report – The Inside Story of the 1MDB Expose” என்ற நூலில் கிளேர் எழுதியதன் அடிப்படையில் குற்றவியல் சட்டப் பிரிவு 500-வது விதியின் கீழ் திரெங்கானு சுல்தானா அந்த குற்றவியல் அவதூறு வழக்கைத் தொடுத்தார்.

இதே நூலில் கண்ட அவதூறு அம்சங்களின் அடிப்படையில் கிளேர் திரெங்கானு சுல்தானாவுக்கு 300,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பொது (சிவில்) வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதைத் தொடர்ந்து இந்த குற்றவியல் அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை இரத்து செய்ய வேண்டுமென கிளேர் கோலதிரெங்கானு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதனை கிளேரின் வழக்கறிஞர்கள் உறுதி செய்தனர்.