Home One Line P1 தனிமைப்படுத்தலின் போது மொகிதின் வெளிநாடு சென்றதை பிரதமர் அலுவலகம் மறுத்தது

தனிமைப்படுத்தலின் போது மொகிதின் வெளிநாடு சென்றதை பிரதமர் அலுவலகம் மறுத்தது

664
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் புற்றுநோய் சிகிச்சை பெற உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியதாக சரவாக் ரிப்போர்ட்டின் குற்றச்சாட்டை பிரதமர் அலுவலகம் இன்று மறுத்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், சரவாக் ரிப்போர்ட் ஒரு பொய் மற்றும் தீங்கிழைக்கும் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது என்று அது விவரித்தது.

“தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில், வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற உத்தரவுக்கு பிரதமர் எப்போதும் கீழ்ப்படிந்தார்.

#TamilSchoolmychoice

“தற்காப்பு அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சு இயக்குனருண்ட காணொளி அமர்வில் இணைந்தது, மற்றும் அனைத்து அதிகாரப்பூர்வ பணிகளும் வீட்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டன.

“எனவே, பிரதமர் வீட்டை விட்டு வெளியேறுவதன் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியதாக சரவாக் ரிப்போர்ட் கூறியது, முற்றிலும் ஆதாரமற்றது. இது ஆசிரியரின் புனைகதை மட்டுமே.” என்று அது கூறியது.

சுகாதார அமைச்சின் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையை அவர் தனிமைப்படுத்தப்பட்ட போது மேற்கொண்டார்.

சரவாக் ரிப்போர்ட் குறிப்பிட்டுள்ளபடி விமான நுழைவுச் சீட்டு, சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் எனக் கூறப்படுவது உள்ளிட்ட ஆதாரங்களை வழங்குமாறு அது கேட்டுக் கொண்டது.

அவ்வாறு செய்யத் தவறினால், பிரதமரின் பெயருக்கு கேடு விளைவிக்கும் நோக்கில் இந்த தளம் இயங்குகிறது என்று பிரதமர் அலுவலகம் கூறியது.

“செய்தித்தளம் இப்போது உண்மை அல்லாமல் அறிக்கைகள் மூலம் அவதூறுக்கு ஆதரவளிப்பதற்கும் பரப்புவதற்கும் ஓர் அரசியல் கருவியாக மாறியது துரதிர்ஷ்டவசமானது.

“இந்த அவதூறு நாடு முன்னர் அனுபவிக்காத சுகாதார பிரச்சனைகள் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் போது தேவையற்ற கவனச்சிதறல் ஆகும்.” என்று அது கூறியது.