Home நாடு டைம் இதழ்: 100 செல்வாக்குமிக்க நபர்கள் பட்டியலில் மகாதீர்!

டைம் இதழ்: 100 செல்வாக்குமிக்க நபர்கள் பட்டியலில் மகாதீர்!

780
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு மே 9-ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில், வரலாற்று மிக்க வெற்றியைக் கண்ட பிரதமர் மகாதீர் முகமட், டைம் இதழின் 100 அதிக செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

சரவாக் ரிப்போர்ட் ஆசிரியரான, கிளேர் ரியூகாசல் பிரவுன் அவரைக் குறிப்பிடுகையில், 93 வயதுடைய மகாதீரை ஒருவல்லமைமிக்க பழைய போர்வீரர்என்று விவரித்துள்ளார்.

அதிகாரத்தை எதிர்த்துப் போராட நீங்கள் இளைஞராக இருக்க வேண்டியதில்லை. 1எம்டிபி நிதியிலிருந்து மில்லியன் கணக்கான டாலர்களை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமருக்கு எதிராக நின்று வெற்றியைக் கண்டவர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

டாக்டர் மகாதீரின் பிரச்சாரம் பெருமளவில் மக்களை ஒன்று சேர்த்ததோடில்லாமல், அவர் மீது நம்பிக்கையை வைத்து தேர்தல் கூட்டணிகள் அமைக்கப்பட்டு, தனது 92-வது வயதில் மலேசியர்களின் முழு நம்பிக்கையைப் பெற்றவர் என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், நியூசிலாந்து பிரதமர் ஜசிண்டா அர்டேர்ன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஆகியோர் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.