Home இந்தியா இந்தியா தேர்தல்: தமிழகத்தில் வாக்களிப்பு தொடங்கியது, அஜித் குமார், ரஜினிகாந்த் வாக்களிப்பு!

இந்தியா தேர்தல்: தமிழகத்தில் வாக்களிப்பு தொடங்கியது, அஜித் குமார், ரஜினிகாந்த் வாக்களிப்பு!

844
0
SHARE
Ad

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மக்களவை, சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை, உள்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்குத் தொடங்கியது

இதனிடையே, நடிகர்களான அஜித் குமார் மற்றும் ரஜினிகாந்த் தங்களது வாக்கு உரிமையை முறையாக பதிவு செய்துள்ளனர். திருவான்மியூரில் உள்ள அரசுப்பள்ளியில் தனது மனைவியுடன் அஜித் குமார் வாக்களித்தார். அதே போன்று நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரி கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று 38 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகின்றது. அதே போன்று புதுச்சேரியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகின்றது. தமிழகத்தில் 5.84 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

#TamilSchoolmychoice

காலை முதலே மக்கள் தங்களின் வாக்குகளைச் செலுத்த வரிசையில் நின்றுக் கொண்டிருந்தனர். முதல் முறையாக தமிழகத்தில் 12 லட்சம் இளம்  வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.