Home நாடு மைக்கா ஹோல்டிங்ஸ் விவகாரம் தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை

மைக்கா ஹோல்டிங்ஸ் விவகாரம் தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை

773
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மைக்கா ஹோல்டிங்ஸ் விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டிருக்கும் ஊழல் தடுப்பு ஆணையம், சில இடங்களில் தேடுதல் வேட்டையை நடத்தியிருக்கிறது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள நான்கு இடங்களில் – குறிப்பாக டாமன்சாரா, டுத்தா மாஸ் – ஆகிய பகுதிகளில் உள்ள அலுவலகங்கள்,இல்லங்களில் சோதனை நடவடிக்கைகளை ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை (16 ஏப்ரல்) இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

#TamilSchoolmychoice

மைக்கா ஹோல்டிங்க்ஸ் தொடர்பில் நடைபெற்று வரும் ஊழல் மற்றும் அதிகார விதிமீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக நடத்தப்பட்ட இந்த சோதனைகளில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்றும், நிறுவனச் செயலாளர், அந்நிறுவனக் கலைப்புக்கான பொறுப்பாளர் தொடர்புடைய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஊழல்களைக் காட்டிக் கொடுக்கும் ஊடக இயக்கமான சரவாக் ரிப்போர்ட் அண்மையில் மைக்கா ஹோல்டிங்க்ஸ் தொடர்பில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்தே ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகள் தொடங்கப்பட்டன.