Home நாடு 1.4 மில்லியன் பணம் வழங்கிய விவகாரம் ஹாடிக்கு தெரியாது!

1.4 மில்லியன் பணம் வழங்கிய விவகாரம் ஹாடிக்கு தெரியாது!

888
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஆரப்பக்கட்டத்தில், சராவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுனுக்கு 1.4 மில்லியன் ரிங்கிட் பணம் வழங்கப்பட்ட விவகாரம், பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு தெரியாது என ரமெலி மூசாவிற்கு தொடர்புடைய வட்டாரம் தெரிவித்துள்ளதாக மலேசியாகினி பதிவிட்டுள்ளது.

அனைத்து பரிமாற்றங்களும், ஆரம்பத்திலிருந்தே ரமெலி மூசாவை நடுவராக வைத்து, பாஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களால் பேசப்பட்டு வந்ததாக பெயர் சொல்ல விரும்பாத அவர் குறிப்பிட்டார்.

அனைத்து பரிமாற்றங்களும் முடிந்து, அவர் (ஹாடி) ரமெலியை சந்தித்த பின்பே இவ்விசயம் குறித்து அவருக்கு தெரிய வந்தது” என அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முதலில் அவர் ஆச்சரியமடைந்தார்எனவும் அவர் தெரிவித்தார்.

ஹாடியைப் போன்றே, பாஸ்கட்சியின் மத்தியக்குழுவிற்கு இந்த விவகார்ம குறித்து அறிவிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் ஐவர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவர்களில் மூவர், பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தாகியூடின் ஹசான், திரெங்கானு மந்தரி பெசார் டாக்டர் அகமட் ஷாம்சுரி மொக்தார் மற்றும் பாஸ் கட்சியின் வழக்கறிஞர் வான் ரொஹிமி வான் டாயுட் ஆவர் என அவர் குறிப்பிட்டார்.

இதில் சம்பந்தப்பட்ட மேலும் இருவரின் அடையாளங்களை தாம் தற்போதைக்கு வெளியிட விரும்பவில்லை எனவும், இந்த குற்றச்சாட்டுக் குறித்து அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.