பாரத ரத்னா விருது : முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவ், வேளாண்மை அறிவியலாளர் சுவாமிநாதன் பெறுகின்றனர்

    433
    0
    SHARE
    Ad

    புதுடில்லி : பாஜகவின் முன்னாள் தலைவர் அத்வானிக்கு இந்தியாவின் உயரிய விருது பாரத ரத்னா வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் மூவருக்கு அந்த விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    பாரத ரத்னா பெறும் சரண் சிங், நரசிம்ம ராவ் இருவரும் முன்னாள் இந்தியப் பிரதமர்களாவர். நரசிம்ம ராவ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதும் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

    வேளாண்மைத் துறையில் பசுமைப் புரட்சிகள் செய்த அறிவியலாளர் சுவாமிநாதன் பாரத ரத்னா பெறும் மற்றொரு பிரமுகராவார். இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். எம்ஜிஆருக்குப் பின்னர் பாரத ரத்னா பெறும் தமிழ் நாட்டுக்காரராக இவர் கருதப்படுகிறார்.