புதுடெல்லி, ஜூலை20- சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
இதனால், இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத்தின் விலை பெருமளவு குறைந்துள்ளது.
கிரீஸ் நாட்டில் நிலவி வந்த பொருளாதாரப் பிரச்சினை காரணமாகப் பங்குச் சந்தைகளில் முதலீடு குறைந்திருந்தது.
ஆனால், தற்போது கிரீஸ் பிரச்சினை தீர்ந்து அங்கு வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டு, தங்கத்தைக் காட்டிலும் பங்குச் சந்தைகளில் அதிக முதலீடு செய்யப்படுவதால், தங்கத்தின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.376 குறைந்துள்ளது. ஒரு பவுன் தங்கம் ரூ.19 ஆயிரத்து 96 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.