Home இந்தியா மோடி ஒரு ஹிட்லர்- மும்பைப் பெண் மேயர் கருத்து!

மோடி ஒரு ஹிட்லர்- மும்பைப் பெண் மேயர் கருத்து!

447
0
SHARE
Ad

modiமும்பை,ஜூலை 20- சிவசேனா கட்சியைச் சேர்ந்த மும்பைப்  பெண் மேயர் ஸ்னேகல் அம்பேத்கர்(43)., பிரதமர் மோடியைச் சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக இவர் சர்ச்சைகளுக்குப் பேர் போனவர் எனக் கூறப்படுகிறது.

மேயராகப் பதவியேற்ற ஓரிரு மாதத்திலேயே காரில் சிவப்பு விளக்கு பொருத்தியபடி வலம் வந்து பரபரப்பைக் கிளப்பியவர்.

#TamilSchoolmychoice

இது குறித்து விமர்சனங்கள் எழுந்தபோது “நான் முதல்வருக்கு இணையான மக்கள் பணியை மேற்கொள்வதாக நினைக்கிறேன். எனவே சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட காரை உபயோகிப்பதில் எந்தத் தவறும் இல்லை” என்று உறுதியாகச் சொன்னவர்.

இந்நிலையில் அவர், “பிரதமர் நரேந்திர மோடி மிகவும் தன்னம்பிக்கையுடன் தனது பணிகளை மேற்கொள்வதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். ஆனால், அவரது ஆட்சி ஹிட்லரின் ஆட்சியைப் போல் இருக்கிறது. ஒரு தனிப்பட்ட நபரின் கையில் ஒட்டு மொத்த அதிகாரமும் குவிந்தால் இப்படிதான் நடக்கும்” என்று வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார்.

இந்தப் பேச்சு பாஜக-வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர் கூறிய கருத்திற்குப் பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.