Home கலை உலகம் விஜய்க்கு வில்லனா? நானா?- பாரதிராஜா மறுப்பு!

விஜய்க்கு வில்லனா? நானா?- பாரதிராஜா மறுப்பு!

673
0
SHARE
Ad

parathiசென்னை, ஜூலை 22- கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அட்லீ இயக்கும் புதுப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க இயக்குநர் பாரதிராஜா மறுத்துவிட்டார்.

விஜய் கதாநாயகனாகவும், சமந்தா- எமி ஜாக்சன்  இருவரும் கதாநாயகிகளாகவும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் விஜய்க்கு வில்லனாகப் புதுமையான தோற்றத்தில், இதுவரை வில்லனாக நடிக்காத ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணினார் அட்லீ.

#TamilSchoolmychoice

இயக்குநர் பாரதிராஜா அதற்குப் பொருத்தமாக இருப்பார் எனத் தோன்றியது.

இதற்காக இயக்குநர் பாரதிராஜாவை அணுகிய போது, “என்னது விஜய்க்கு வில்லனா? நானா? ஏதோ மணிரத்னம் படத்தில், சுசீந்திரன் படத்தில் வித்தியாசமான வேடம் என்பதால் நடித்தேன். விஜய்க்கு வில்லன் என்பதெல்லாம் சரிப்படாது; வாய்ப்பே இல்லை” என்று பாரதிராஜா பிடிவாதமாக மறுத்துவிட்டார்.